ஷாங்காய் மஷ்ரூம்



என்னென்ன தேவை?

காளான் - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம், தக்காளி - தலா 1, 
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள் ஃபுட் கலர், தக்காளி சாஸ் - தேவைக்கு,
8 டூ 8 சாஸ்- தேவைக்கு,
ரெட் டோபாஸ்கோ சாஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

காளானை நான்கு துண்டுகளாக நறுக்கி, சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து எண்ணெயில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், காய்ந்தமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், 8-டூ-8 சாஸ், ரெட் டோபாஸ்கோ சாஸ், எலுமிச்சைச்சாறு, மஞ்சள் ஃபுட் கலர், உப்பு சேர்த்து கலந்து, வறுத்த காளானை போட்டு கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியனை தூவி சூடாக பரிமாறவும்.