வெஜ் க்ளியர் சூப்என்னென்ன தேவை?

நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டீஸ்பூன்,
பசலைக்கீரை - 4 எண்ணிக்கை,
உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் தண்ணீர் ஊற்றி கேரட், பீன்ஸ், பசலைக்கீரையை போட்டு நன்கு வேகவைக்கவும். பின்பு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். கொதிக்கும்பொழுது மேலே வரும் நுரையை நீக்கி விட்டு இறக்கவும். பவுலில் ஊற்றி ஒரு துளி எண்ணெய், ஸ்ப்ரிங் ஆனியனை தூவி பரிமாறவும்.