ஹாட் கார்லிக் பனீர்



என்னென்ன தேவை?

பனீர் - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 டேபிள்ஸ்பூன்,
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
சர்க்கரை - சிறிது,
காய்ந்தமிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், தக்காளி சாஸ், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
சிவப்பு ஃபுட் கலர் - சிறிது.

எப்படிச் செய்வது?

துண்டுகளாக நறுக்கிய பனீர், சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து பனீரை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, வெங்காயம், காய்ந்தமிளகாய் விழுது போட்டு வதக்கி, தக்காளி சாஸ், சர்க்கரை, சிவப்பு ஃபுட் கலர், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி, சோள மாவை சேர்த்து கலக்கவும். சிறிது கெட்டியானதும் வறுத்த பனீரை போட்டு கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியனை தூவி சூடாக பரிமாறவும்.