வெஜ் புல்லட்



என்னென்ன தேவை?

நறுக்கிய கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
வெங்காயம் - 1,
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

சாஸ் செய்ய...
  
நறுக்கிய பச்சைமிளகாய் - 1,
பூண்டு, இஞ்சி - தலா 1 டீஸ்பூன்,
சோள மாவு - 25 கிராம்,
சர்க்கரை - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி, சர்க்கரை சேர்க்கவும். பிறகு சோள மாவை சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கவும். சாஸ் ரெடி. பாத்திரத்தில் கேரட், கோஸ், பீன்ஸ், வெங்காயம், சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்பு ஒரு தட்டின் பின்புறம் வைத்து தட்டையாக்கி, கத்தியின் மூலம் விரல் அளவிற்கு வெட்டி, எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, சாஸுடன் சூடாக பரிமாறவும்.