வெஜ் நூடுல்ஸ் சூப்



என்னென்ன தேவை?

நூடுல்ஸ் - சிறிது,
நீளமாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டீஸ்பூன்,
பசலைக்கீரை - 1 எண்ணிக்கை,
உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நூடுல்ஸை வேகவைத்து தனியே வைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் ஊற்றி கேரட், பீன்ஸ், பசலைக்கீரையை போட்டு நன்கு வேகவைக்கவும். பின்பு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். கொதிக்கும் பொழுது மேலே வரும் நுரையை நீக்கி விட்டு இறக்கவும். பவுளில் ஊற்றி ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் நூடுல்ஸ் போட்டு பரிமாறவும்.