ப்ரியங்களுடன்...
* கலைமகளின் கவின்மிகு கோயில்களின் தொகுப்பை படித்தபோது கலைமகளுக்கு இத்தனை கோயில்களா என வியப்பு ஏற்பட்டது. - ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.
* அச்சு அசல் இளம் வயது எம்.எஸ். அம்மா போலவே காட்சி தரும் வித்யா பாலன் அட்டைப் படம் கொள்ளை அழகு. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
* பாரம்பரிய புதுச்சேரி உணவு கண்டேன். இந்த மாதிரி உணவுகளை இன்றுதான் காண்கிறேன். சாப்பிடுகிறவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் சமைப்பதற்காக உணவுப் பொருட்களை அப்போது வாங்கி வந்து சமைப்போம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. - வண்ணை கணேசன், சென்னை.
* சரஸ்வதி நிவாசனின் அரவணைக்கும் அன்பு உறவுகளில் சொல்லி உள்ளதைப் போல் வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் அன்புகாட்ட ஆள் இல்லை என்றால் அந்த வாழ்க்கை நரகம்தான். - வரலக்ஷ்மி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.
* காஃபியின் சாதக, பாதகங்களை படித்ததும் அடிக்கடி காஃபி சாப்பிடக்கூடாது என்பது மட்டும் புரிந்தது. - கோகிலாராஜு, திருவாரூர்.
* “விதைகளை பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்கள்”... ஆக்கப்பூர்வமான பாரம்பரியம் மற்றும் உயிர் வாழ்வுக்கு ஆதாரமான உணவுடன் தொடர்புடைய அரிய செயல்களைச் செய்து வரும் தோழிகளுக்கு நல்வாழ்த்துகள். - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* நவராத்திரிக்கு கொலுவை காண வருபவர்களுக்கு வசதியாக 9 நாட்களுக்கும் சுண்டல் ரெசிபிகளை கொடுத்து அசத்திவிட்டீர்கள். - எஸ்.சர்மிளா, சென்னை.
* சிறுவயதில் ஏழ்மையில் வாழ்ந்த விஜயலட்சுமி, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்த ‘பியூபில் ’ அறக்கட்டளை பாராட்டுக்குரியது. - எஸ்.ஏ.அஞ்சலின், சென்னை.
* தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் என 15 கேள்விகளுக்கு இயன்முறை மருத்துவர் கோமதி இசைக்கர் வழங்கியிருந்த பதில்கள் வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல வழிகள் கூறுவதாக இருந்தது. - செ.சோனிகா, கரூர்.
* சர்வதேச செஸ் போட்டியிலே தங்கம் வென்ற சதுரங்க ராணிகளுக்கு வாழ்த்துகள். அதிலும் தமிழ்நாட்டிலிருந்து வைஷாலி மற்றும் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா என்பதும் தனிச் சிறப்பே. - நிர்மலா ராவ், சென்னை.
* பாலின பேதங்கள் ஒரு பார்வை கட்டுரை அருமை. கடந்த கால வாழ்க்கை முறையை ஒரு ஆய்வுக் கட்டுரை போல் விளக்கமாக எழுதியுள்ளார். எழுத்தாளர் லதாவிற்கு வாழ்த்துகள். - எஸ்.காளிதாஸ், கும்பகோணம்.
அட்டைப்படம்: கீர்த்தனாவதி புகைப்படம்: விகாஸ்ராஜா மேக்கப்: பாவ்னா
|