3000 வண்ணங்கள்!
ஆரெம்கேவி அறிமுகப்படுத்தியுள்ள புதுவரவுகள் இவை... ஹம்ச வர்ணா நம் பாரம்பரிய கலெக்ஷன்களில் அன்னம் மற்றும் சக்கர உருவம் பதித்து மூவாயிரம் சிறப்பு வண்ணங்களுடன் அறிமுகமாயிருக்கிறது ‘ஹம்ச வர்ணா பட்டுப்புடவை!’ லினோ லைட் சில்க் சாரீஸ் உடுத்திக்கொள்ள எளிமை... ஆனால், கலர்ஃபுல் வேலைப்பாடுகள் நிரம்பிய சில்க் சேலை இது. இளம்பெண்களுக்கு பிடிக்கும் இந்த நளினமான புடவை! ஜடாயு கலம்காரி காட்டன் புடவையில் இருக்கும் மென்மைத்தன்மை இந்த கலம்காரி புடவையிலும் உண்டு. விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் கிராண்ட் லுக் தருகிறது. 70 வண்ணங்களால் ஆன புடவை. லினோ வர்ணா வானவில்லின் வர்ணஜாலங்களை புடவையில் கொண்டிருப்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. எடுப்பான கலரில் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் கலர் காம்பினேஷன் என அசத்துகிறது இந்தப் புடவை. தீபாவளிக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள இப்புடவை ரகங்கள் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இதே பட்டு ரகத்தில் பட்டுப்பாவாடை செட்டும் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து!
|