சகல ‘கலா’ நகரம்!
மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளும் கோட்டைகளும் இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஜெய்ப்பூரில் நின்றுகொண்டிருக்கின்றன! ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் கலை ரசனை மிக்கது. நகரைச் சுற்றியிருக்கும் ஆரவல்லி மலைத் தொடர்களில் கட்டப்பட்டிருக்கும் கோட்டைகளின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆல், அரச, அத்தி மரங்களை எங்கும் காண முடிகிறது.
ஊர் எங்கும் புறாக்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. குருவிகள், மயில்கள், குரங்குகள், சிங்கவால் குரங்குகள் சர்வசாதாரணமாக உலாவுகின்றன. பாந்தினி வேலைப்பாடு நிறைந்த துணிகள் போர்த்தப்பட்ட ஒட்டகங்களும் யானைகளும் மனிதர்களை ஏற்றிக் கொண்டு, பவனி வருகின்றன. ஆல்பர்ட் அருங்காட்சியகம், தண்ணீருக்குள் இருக்கும் ஜல் மஹால், ஜெய்ப்பூரின் அடையாளமான ஹவா மஹால், ஜந்தர் மந்தர், வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்ட பிர்லா மந்திர், சிட்டி பேலஸ், நகர்ஹார், ஜெய்ஹார், ஆம்பர் கோட்டைகள் எல்லாம் ஜெய்ப்பூரில் அவசியம் அசைபோட வேண்டிய இடங்கள்.
* எப்படிச் செல்வது? ரயில் மற்றும் விமானத்தில் செல்லலாம்.
* எத்தனை நாள்கள்? ஜெய்ப்பூர் மட்டும் என்றால் 3 நாள்கள் போதும். ராஜஸ்தானிலுள்ள மற்ற இடங்களுக்கும் செல்லவேண்டும் என்றால் குறைந்தது 1 வாரம் தேவைப்படும்.
* என்ன வாங்கலாம்? கல் வேலைப்பாடு நிறைந்த வளையல்கள், அலங்கார காலணிகள், பாந்தினி சேலைகள், லங்கா சோளிகள், கண்கவரும் பைகள், படுக்கை விரிப்புகள், பொம்மைகள் என்று ஏராளமானவை நாம் வாங்குவதற்காகக்காத்திருக்கின்றன.
* அருகில் உள்ள இடங்கள்? ஸீமிகப்பழமையான நகரமான புஷ்கரில் பிரம்மா கோயிலும் மிகப்பெரிய ஏரியும் இருக்கின்றன. இந்தக் குளம் சிவனின் கண்ணீரிலிருந்து உருவானது என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் 5
தினங்கள் (அக்டோபர்-நவம்பர்) நடைபெறும் ‘புஷ்கர் மேளா’ என்ற ஓட்டகச் சந்தை திருவிழா உலகப்புகழ் பெற்றது. ஸீபுஷ்கர் அருகிலேயே மிகப் பிரபலமான அஜ்மிர் தர்ஹா இருக்கிறது. ஸீரந்தம்பூர் புலிகள் சரணாலயம், தார் பாலைவனம், உதய்பூர், ஜோத்பூர், பீகானீர் போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.
|