அறிவியல் ஆய்வுப் பணியில் பெண்கள்



* உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள். பல்கலைக்கழகங்களில் ஆய்வு மாணவிகளாக சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும், உயர் நிலைகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. ஆச்சரிய விதிவிலக்குகளும் உண்டு.

பொலிவியாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 63 சதவிகிதம் பேர் பெண்கள். பிரான்ஸிலோ 26 சதவிகிதம்தான். எத்தியோப்பியாவில் 8 சதவிகிதம் மட்டுமே பெண்கள். அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளிலும் பாலினப் பாகுபாடு அதிகம் என்பதே அறிவியல்பூர்வ உண்மை.

*வருகிறது. 49 சதவிகிதம் பெண்கள் மட்டுமே முனைவர் மாணவிகளாக சேருகிறார்கள். அவர்களில் 36 சதவிகிதம் பேர் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக உருவாகிறார்கள். பல பெண்களுக்கு வாழ்க்கைக் குறிக்கோள் சிறப்பானதாக இருக்கிறது. அந்தக் குறிக்கோளுடன் குடும்ப அக்கறை மற்றும் பொறுப்புகளுடன் மோதல் ஏற்படும் போது பின்வாங்க நேரிடுகிறது. உலகின் எல்லா பகுதிகளிலும் பெண்களுக்கு இதே நிலைமைதான்.

* நல்ல சம்பளமும் வாய்ப்புகளும் இருப்பதால் தனியார் துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்கள் கல்வி மற்றும் அரசுத் துறைகளை நாடிச் செல்கிறார்கள். உதாரணமாக, அர்ஜென்டினாவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களில் 52 சதவிகிதம் பேர் பெண்கள். அவர்களில் 29 சதவிகிதம் பேர் மட்டுமே தனியார் துறைகளில் வேலை செய்கிறார்கள்.

* இளம் வயதிலேயே பெண்களை கணிதம் மற்றும் அறிவியலை பின்பற்றச் செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுக்க பல இடங்களில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண் ஆராய்ச்சியாளர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். கொரியாவில் ஆராய்ச்சியாளர்களில் 17 சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். அவர்களிலும் 9 சதவிகிதம் பேர்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருக்கிறார்கள்.

* இந்தியாவில் அறிவியல் இளங்கலை படிப்பில் சேரும் பெண்கள் 44 சதவிகிதம். முனைவர் ஆய்வில் சேரும் பெண்கள் 41 சதவிகிதம்.

* அமெரிக்காவில் அறிவியல் இளங்கலை படிப்பில் சேரும் மாணவிகள் 56 சதவிகிதம். முனைவர் ஆய்வில் சேரும் பெண்கள் 50 சதவிகிதம்.

* மத்திய ஆப்பிரிக்காவில் அறிவியல் இளங்கலை படிப்பில் சேரும் மாணவிகள் 22 சதவிகிதம். முனைவர் ஆய்வில் சேரும் பெண்கள் 39

சதவிகிதம். ஆராய்ச்சியாளர்களாக இருப்பவர்கள் 42 சதவிகிதம். இயற்கை அறிவியல் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களில் 27 சதவிகிதம் பேர் பெண்கள். சமூக அறிவியல் துறையில் 49 சதவிகிதமும் மானுடவியல் துறையில் 100 சதவிகிதமும் பெண்கள்! அதே மத்திய ஆப்பிரிக்காவில் இன்ஜினியரிங், மருத்துவ அறிவியல், வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் சதவிகிதம் பூஜ்ஜியம்.(‘யுனெஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டேட்டிஸ்டிக்ஸ்’ அறிக்கையின்படி...)