என்ன எடை அழகே!



‘மாற்றம் ஒன்றே மாறாதது...’ என்பதை ‘என்ன எடை அழகே’ ரியாலிட்டி தொடர் தோழிகளுக்கு இன்னுமொரு முறை நிரூபித்தது.குங்குமம் தோழியும், ‘தி பாடி ஃபோகஸ்’ நிறுவனமும் இணைந்து நடத்திய ‘என்ன எடை அழகே’ எடை குறைப்பு நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம்...

முயற்சியையும் நம்பிக்கையையும் கைவிடாமல், 6 பங்கேற்பாளர்களில் இறுதி வரை முன்னேறியவர்கள் மூவர். தாராபுரத்தைச் சேர்ந்த தோட்டக் கலை அலுவலர் சந்திர கவிதா, சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெயந்தி மற்றும் பல் மருத்துவர் பிரதீபா என மூவருக்கும்தான் கடும் போட்டி!


ஆதர்ச எடையை எட்டிப் பிடிப்பதில் முதல் 2 இடங்களில் முன்னும் பின்னுமாக மாறி மாறி வந்தார்கள் சந்திர கவிதாவும் ஜெயந்தியும்.ஆரம்ப எடையைப் பார்த்து, எவ்வளவு குறைக்க வேண்டும், எப்படியெல்லாம் குறைக்கலாம் என தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும்ஆலோசனைகளையும் பயிற்சிகளையும்சிகிச்சைகளையும் வழங்கினார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.

வேலை நிமித்தம் வெளியூருக்கு மாற்றலான காரணத்தினால் சந்திர கவிதாவால், அடிக்கடி நேரடி சிகிச்சைக்கு வர முடியவில்லை. ஆனாலும், அதை ஈடுகட்டும் வகையில் தனக்கு சொல்லப்பட்ட உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மிகச் சரியாகப் பின்பற்றினார் அவர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போதாத நிலையிலும், எடை குறைப்பு சிகிச்சைகளை ஒரு நாள் கூடத் தவற விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார் ஜெயந்தி.குறைகிற ஒவ்வொரு கிலோ எடையும், இவர்களுக்கு தன்னம்பிக்கையாக அதிகரிக்கத் தொடங்கியதை அவர்களது தோற்றம், பேச்சு, நடவடிக்கை என அனைத்துமே பிரதிபலித்தன.

இருவருமே சரியான எடைக்கு வந்துவிட்டபோதிலும், சொன்னதை விட மேலும் ஒரு கிலோ எடையை குறைத்து, முதலிடத்தைப் பிடித்தார் சந்திர கவிதா!எடை குறைப்பு முயற்சியில் வெற்றி பெற்றஇருவருக்கும் அழகான பட்டுப்புடவைகளைப்பரிசளித்தது எஸ்.எம். சில்க்ஸ் நிறுவனம்.

எடை குறைத்த இருவரையும் அழகிகளாக்கிக் காட்டும் சவாலை ஏற்றுக் கொண்டார் ‘ஃப்ரிஸ்டா’ பியூட்டி பார்லர் உரிமையாளர் மேனகா.இருவருக்கும் மேக்கப் செய்து, ஹேர் ஸ்டைலை மாற்றி, அழகாக சேலையும் உடுத்திவிடப்பட்டது அங்கே. வைத்த கண் வாங்காமல் கண்ணாடியில் இருவரும் தங்களை மணிக்கணக்காக ரசித்த அந்தக் காட்சி
அத்தனை அழகு!

ஜெயந்தி   
ஆரம்ப எடை    81.7 கிலோ
இப்போதைய எடை    74 கிலோ
சந்திர கவிதா   
ஆரம்ப எடை    73.5 கிலோ
இப்போதைய எடை    62 கிலோ

‘‘வாழ்க்கையில முதல் முறையா இப்பதான் பியூட்டிபார்லருக்கே வந்திருக்கேன். என்னோட சுருட்டை முடியை அயர்ன் பண்ணி, ஸ்ட்ரெயிட் ஆக்கினதோட இல்லாம, கருப்பான என்னை களையாகவும் மாத்திட்டாங்க. இன்னிக்கு புதுசா பிறந்த மாதிரி ஃபீல் பண்றேன். எடை குறைப்புக்கு வழிகாட்டி, என் தன்னம்பிக்கையை எக்கச்சக்கமா உயர்த்திக் கொடுத்ததுக்காக குங்குமம் தோழிக்கும் அம்பிகா சேகர் மேடத்துக்கும் நன்றிகள் பல... என்னை கண்ணாடியில பார்க்கிற ஒவ்வொரு முறையும் இவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லத் தவற மாட்டேன்...

சேலை கொடுத்த எஸ்.எம். சில்க்ஸுக்கும் மேக் ஓவர் பண்ணின மேனகா மேடத்துக்கும் தேங்க்ஸ்... இப்படியொரு ட்ரீட்டை நான் நிச்சயமா எதிர்பார்க்கலை... இதே கெட்டப்ல வீட்டுக்குப் போய் அத்தனை பேரையும் அசத்தப் போறேன்... மறு படியும் தேங்க்ஸ்...’’ என நெகிழ்ந்து, மகிழ்ந்தார் சந்திர கவிதா.

இன்னிக்கு புதுசா பிறந்த மாதிரி ஃபீல் பண்றேன். எடை குறைப்புக்கு வழிகாட்டி, என் தன்னம்பிக்கையை எக்கச்சக்கமா உயர்த்திக் கொடுத்ததுக்காக ரொம்ப தேங்க்ஸ்!

‘என்ன எடை அழகே’ சீசன் 2
கலந்து கொள்ள விரும்பும் வாசகிகளுக்கு...

* நீங்கள் எடை குறைக்க விரும்பும் காரணத்தை சுருக்கமாக எழுதி, பெயர், முழு முகவரி, மொபைல் எண்ணோடு (அஞ்சல் அட்டையில் மட்டுமே) எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் பணி, வயது, இப்போதைய எடையையும் குறிப்பிட மறவாதீர். (என்ன எடை அழகே, குங்குமம் தோழி, 229 கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600004)
மின் அஞ்சலில் அனுப்ப: kungumamthozhi@gmail.com

* தேர்ந்தெடுக்கப்படும் தோழிகளுக்கு டயட்டீசியன் அம்பிகா சேகர் (தி பாடி ஃபோகஸ்) மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையில் வழிகாட்டுவார்கள். நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியத்தை நோக்கி அடியெடுத்து வைக்க நினைக்கும் உங்களுக்காக, குங்குமம் தோழி வழங்கும் அன்புப் பரிசு இது!

* தேர்ந்தெடுக்கப்படும் தோழிகளின் எடை குறைப்பு அனுபவங்கள் புகைப்படங்களுடன் பிரசுரிக்கப்படும். இது மற்ற தோழிகள் பயன்பெறவும் பிராக்டிகலாக உதவும்.

இந்த ரியாலிட்டி தொடர் மட்டும் இல்லாமப் போயிருந்தா, வாழ்க்கையில பெரிய விஷயத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி
காட்டின தோழிக்கு தேங்க்ஸ். 20 வயசு குறைஞ்ச மாதிரி ஃபீல் பண்றேன்...

ஜெயந்தியின் அனுபவமோ வேறு விதம். குழந்தையின் நினைவு, குடும்பச்சூழல் என எப்போதும் ஏதோ ஒரு சோகம் அழுத்த, களையின்றியேகாட்சியளிக்கிற ஜெயந்தியிடம் அன்று அத்தனை உற்சாகம்...‘‘என்னை அழகாகாட்டிக்கணும்கிற நினைப்பெல்லாம் என்னிக்கும் இருந்ததில்லை. நான்ஏற்கனவே சொன்ன மாதிரி என் குழந்தை பின்னாடி சுறுசுறுப்பா ஓடணுங்கிறதுக்காகத்தான் எடையை குறைக்க விரும்பினேன். எடை குறைய ஆரம்பிச்சதுமே என்மனநிலையில பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.

என் பையனுக்கு நான்இருக்கேன்... ஆரோக்கியமா இருக்கேன்... அவனை சிறப்பா பார்த்துக்க முடியும்னு ஒரு நம்பிக்கை வந்தது. உடம்பு லேசான மாதிரி இருந்தேன். மனசு அதைவிட லேசான மாதிரி ஒரு ஃபீலிங். இந்த பட்டுப்புடவை, மேக்கப், ஹேர் ஸ்டைல்... எல்லாமே எனக்கு இன்ப அதிர்ச்சிகள்... சந்திரகவிதா சொன்ன மாதிரி நானும் பியூட்டி பார்லர் பக்கமே போனதில்லை. என்னை எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு அழகாக்கிட்டாங்க மேனகா மேடம்.

ஆரம்பத்துல எனக்கு வெயிட் அத்தனைசீக்கிரம் குறையலை. ‘என்னால முடியாது போலருக்கே மேடம்’னு சோர்ந்து போவேன். அப்பல்லாம் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, தைரியம் சொல்லி, மோட்டிவேட் பண்ணி, இந்த அளவுக்குக் கொண்டு வந்தவங்க அம்பிகா மேடம்தான்.

குங்குமம் தோழியோட இந்த ரியாலிட்டி தொடர் மட்டும் இல்லாமப் போயிருந்தா, வாழ்க்கையில பெரிய விஷயத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டின தோழிக்கு தேங்க்ஸ். 20 வயசு குறைஞ்ச மாதிரி ஃபீல் பண்றேன்...’’ வெட்கப்பட்டு விடை கொடுத்தார் ஜெயந்தி. சந்திர கவிதாவையும் ஜெயந்தியையும் தொடர்ந்து டாக்டர் பிரதீபாவும் இந்த அனுபவத்துக்கான தன் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

படங்கள்: ஆர்.கோபால்