சேலைகளில் புது டிரெண்ட்ஸ்!



இந்த வருடம் தீபாவளிக்கு சாரீஸ் கலெக்  ஷன்ஸ் புதிதாய் என்னவெல்லாம் வந்திருக்கு என அறிய பஜார் வீதிகளை ஒரு ரவுண்ட் அடித்தபோது, சென்னை எம்.சி. ரோட்டில் உள்ள சாந்தி சாரீஸ் கடைக்குள் நுழைந்ததில், நம்மை வரவேற்று புதிதாக வந்திருக்கும் கலெக்  ஷன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினார், எழுத்தாளரும் சாந்தி சாரீஸ் உரிமையாளருமான லதா சரவணன்.

‘‘தீபாவளிக்கு குடும்பமாக வந்து எடுத்துட்டுப் போகிற மாதிரி எங்களோடது ஃபேமிலி ஷாப்தான்’’ என்றவர், ‘‘பெண்களுக்கான சேலைகளை பெரும்பாலும் சூரத், அஹமதாபாத், கொல்கத்தா, வாரணாசி, பெங்களூர், ஆந்திராவில் சிராலா, குண்டூர் பகுதிகளில் மொத்தமாகக் கொள்முதல் செய்து எடுத்து வருகிறோம். அதேபோல் மணப்பெண்களுக்கான காக்ரா சோலி, லெஹங்கா போன்ற பார்ட்டிவேர் உடைகளை அஹமதாபாத், பாம்பே போன்ற ஊர்களில் இருந்து வரவழைக்கிறோம்.

பெரிய ஷோரூம்களில் முப்பத்தி ஐந்து ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும் காக்ரோ சோளி, லெஹங்கா உடைகள் பத்து முதல் பனிரெண்டாயிரத்திற்கே எங்களிடம்  கிடைக்கும்’’ என்றவர், தீபாவளி கொண்டாட்டத்திற்கு பெண்களுக்கென பிரத்யேகமாக வந்திருக்கும் புதிய வரவு சேலைகள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

‘‘எங்களிடம் பட்டுச்சேலைகள், ஆபீஸ் யூஸ், டெய்லி வேர், ரெகுலர் வேர், டோலா சேலை, டிஸ்யூ சேலைகள், பனாரஸ் சேலைகள், டிரெண்ட்டி சில்க், வாரணாசி சாரீஸ், கல்கத்தா சாரீஸ், அம்மா பொண்ணு காம்போ, யூனிஃபார்ம் சேலைகள், வெங்கடகிரி காட்டன், மல் காட்டன், சுங்கடி சேலைகள், காட்டன் சேலைகள், 15 முதல் 20 வெரைட்டிகளில் முட்டி வரை உள்ள லாங் பார்டர் நாராயணா காட்டன் சேலைகள் என பல்வேறு வெரைட்டிகளில் சேலைகள் இருக்கிறது.

பத்தாயிரத்திற்கு கீழ் தரமான ஃப்யூர் சரிகை பட்டுச் சேலைகளை பார்ப்பது அறிது என்பதால், பட்டுச்சேலை மாதிரியே, அதே டிசைனில் பழைய பட்டு பார்டர் கலெக்‌ஷனில் வின்டேஜ் சேலைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.வின்டேஜ் சேலைகள் 1500 ரூபாயில் தொடங்கி, 75 ஆயிரம் ரூபாய் வரை எங்களிடம் உண்டு. 

இதில் செமி பட்டு, ரா சில்க்ஸ், பட்டர் சில்க்ஸ் என வெரைட்டிகளும் கிடைக்கும். அந்தக் காலத்தில் மகாராணிகள் கட்டுவது மாதிரியான டிரெண்டியான கலெக்‌ஷன்களும் உண்டு.

வீட்டுக்குள்ளேயே நடக்கும் சிம்பிளான நிகழ்ச்சி என்றாலும் சரி, கிராண்டான ஃபங்ஷன் என்றாலும் சரி, எல்லாவற்றுக்கும் பொருந்துகிற மாதிரி, ஃபேன்ஸி வொர்க்கில், பார்டர் கூடுதலாய் எம்போஸ் செய்யப்பட்டு, உடலில் இருக்கும் கலருக்கு பார்டர் மேட்ச் செய்யப்பட்டு, வெயிட்லெஸ் பட்டுச் சேலை மாதிரியே சேலைகள் வருகிறது. இந்த சேலைகளைப் பொறுத்தவரை பார்டரில்  ஹெவி வொர்க்  செய்யப்பட்டோ, பிளவுசில் வொர்க் செய்தோ இருக்காது.

ஆரி வொர்க் செய்யப்பட்ட பிளவுஸ் பிட்டுகள் 600 ரூபாயில் தொடங்கி எங்களிடம் கிடைக்கிறது. அதேபோல், இப்போது வரும் பட்டுச் சேலை பிளவுஸ் துணியில் பார்டர் கலருக்கு அவர்களே ஆரி வொர்க் செய்தும் அனுப்புகிறார்கள். இது 2500ல் தொடங்கி 13 ஆயிரம் வரை கிடைக்கிறது.

தீபாவளிக்கு புது கலெக்‌ஷனாக இந்த ஆண்டு வந்திருப்பது பனாரஸ் சேலைகள். பார்க்க ஜிகுஜிகுன்னு, சைனியா, மல்டி கலரில் சேலை வெயிட்டாக இருக்கும். இதில் ஒரே சேலையில் மூன்று கலர்கள் தெரிகிற மாதிரி கலர்கள் வேவாகும். 2500 ரூபாயில் தொடங்கி 6000ம் ரூபாய்வரை இந்த வகை சேலைகள் நம்மிடம் உள்ளது. 

அதேபோல் டிரெண்டி சில்க் என்ற ஒன்றையும் தீபாவளிக்கு புதிதாகக் கொண்டு வந்திருக்கோம். இதுதான் இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட். இவை மல்டி கலரில் கிடைக்கிறது. சேலையின் நிறம் டார்க் எனில் பார்டர் டல்லாகவும்,  பார்டர் டார்க்கில் இருந்தால் சேலை லைட்  கலரில் மைல்டாகவும் வருகிறது. பார்ட்டிவேருக்கு எனப் பயன்படுகிற இந்த சேலைகளின் விலை 600 ரூபாயில் தொடங்கி 2000ம் ரூபாய் வரை இருக்கிறது.

இதில் டிக்கி ஒர்க், சின்னச் சின்ன ஷரி வொர்க், மணி வொர்க், ஷெர்க்கான் ஸ்டோன்ஸ் வொர்க் போன்றவையும் கிடைக்கும். தொழிலதிபர் நீத்து அம்பானி, நடிகை ஜோதிகா, நடிகை நயன்தாரா போன்றவர்கள் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கட்டி வந்த பார்டரே இல்லாமல் வருகிற செல்ஃப் டிசைன் டிஸ்யூ கலெக்‌ஷன்ஸ் சேலைகளும் பெண்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிசைன்கள் சிந்தடிக், பனாரஸ், காட்டன் என எல்லா வெரைட்டியிலும் கிடைக்கும்.

ஆயிரம் ரூபாயில் தொடங்கி, ஆறாயிரம் ரூபாய் வரை உள்ள டிஸ்யூ பட்டுச் சேலைகள், பேஸ்டல் கலரில் மூன்று வெரைட்டிகளில் வருகிறது. உடம்பு முழுக்க பேஸ்டல் கலரில் ஃப்ளாரல் டிசைன் கலந்து வரும். பட்டுச் சேலையில் ஃப்ளாரல் டிசைன் என்பது புதுசு. இது வித் பார்டர் வித்தவுட் பார்டர் என இரண்டிலுமே வருகிறது. பார்டர்கள் ப்ளைனா ஹெவி சைனிங்கில் வரும். ஜுவல்லரி தயாரிப்பு போலவே இதில் ஸ்ட்ரைப் டிசைன், ஷிக்ஜாக் டிசைன், அன்கட் டிசைன்களும் உண்டு.

வொர்க் செய்யப்பட்ட சேட்டின் கிளாத் சேலைகளில், வெல்வெட் அதிகம் கலந்த மாதிரி, பார்டர் முழுக்க லைட் வெல்வெட்டில் சிக்கி வொர்க் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஸ்டாரை அள்ளித் தெளித்த மாதிரி, பார்டரில் லேஸ் அல்லது நெட் செய்து, சேலை கலரும் பார்டர் கலரும் டிஃப்ரென்ட் லுக்கில் கலர்ஃபுல்லாக வருகிறது.மணப்பெண்களுக்கான காக்ரா சோளி, ப்ரைடல் லெஹன்கா, தற்போதைய டிரெண்டான கோ ஆர்ட் செட்ஸ் சுடிதார்கள், சால் இணைந்த நைட்டி, ஃபிராக் நைட்டி, குழந்தைகள் ரெடிமேட் உடைகளும் தீபாவளி டிரெண்டில் நிறைய வந்துள்ளது.

தீபாவளி கலெக்‌ஷன்ஸ் தவிர்த்து, சுய உதவிக் குழுக்கள், பள்ளி ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரிப் பெண்கள், ஈவென்ட் மேனேஜ்மென்ட் பெண்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் மகளிர் அணிக்கான சீருடையென ஒரே மாதிரியான சேலைகளை பெண்கள் எங்களிடம் வந்து மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்’’ என்றவர், ‘‘பாரம்பரியமும் புதுமையும் கலந்த வண்ணமயமான இந்த தீபாவளி சேலைகள், இந்த ஆண்டு பெண்களை கவர்வது உறுதி’’ என்றவாறு விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்