வைரல் சம்பவம்காவல்துறை நிகழ்த்திய நெகிழ்வான ஒரு சம்பவம் தான் நொய்டாவில் ஹாட் டாக். முதியவர் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து நொய்டாவிற்கு பேருந்தில் வந்தார். மருத்துவரைப் பார்த்து அவரது நோய்க்கான சிகிச்சையைப் பெற வேண்டும். தான் கொண்டு வந்த பையை பேருந்திலேயே தவற விட்டுவிட்டு கீழே இறங்கிவிட்டார்.

அந்தப் பையில்தான் மருத்துவத்துக்கான பணம் இருந்தது. பேருந்தில் பையை விட்டுவிட்டோமே என்று பதற்றமடைந்த அவர் நிலைகுலைந்துபோய் காவல்துறை யிடம் உதவி கேட்டார். அவரது சூழலைப் புரிந்துகொண்ட நொய்டா காவல்துறையினர் சுமார் நான்காயிரம் ரூபாயை வசூல் செய்து அவருக்குக் கொடுத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வை இணையத்தில் கிளப்பியுள்ளது.