சிறந்த தீவுபிலிப்பைன்ஸின் டக்லோபான் நகரத்திலிருந்து தென்கிழக்காக 196 கிலோ மீட்டர் பயணம் செய்தால் சயார்காவ் தீவை அடையலாம். சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கக்கூடிய இந்தத் தீவு 437 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது.
கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், வசதி, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ‘டிராவலர்’ பத்திரிகை சயார்காவை ‘2019-ம் ஆண்டுக்கான சிறந்த தீவு’ என்று கௌரவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.