சூப்பர் டிஸ்பிளே போன்இந்தியாவில் கணிசமான வாடிக்கையாளர்களைக் குறுகிய காலத்தில் கைப்பற்றிய ஒரு நிறுவனம் ‘விவோ’. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக பிரத்யேகமான வாடிக்கையாளர்கள் கூட இங்கே இருக்கிறார்கள்.கடந்த செப்டம்பர் 6-ம் தேதி அன்று ‘Vivo Z1X’ என்ற புதிய மாடலைக் களமிறக்கியுள்ளது ‘விவோ’.

கவர்ச்சிகரமான இதன் வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை வெகு வாகக் கவர்ந்துவிட்டது. அப்படி இந்தப் போனில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.

மென்மையான, இசைவான செயல்பாட்டுக்காக ‘Qualcomm Snapdragon 712 AIE chipset’ பொருத்தப்பட்டுள்ள போன் இது. 6.38 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி சூப்பர் AMOLED மெகா டிஸ்பிளே நவீன டேப்லெட்டுகளுக்கு சவால் விடுகிறது. சோனி சென்சாருடன் 48 எம்பியில் முக்கிய கேமரா, இது வீடியோ, புகைப்படங்களைக் கச்சிதமாக காட்சிப்படுத்துகிறது.

இதுபோக அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, டெப்த் சென்சாருடன் கூடிய இன்னொரு கேமரா என்று மூன்று பின்புற கேமராக்கள் வரிசை கட்டுகின்றன, நண்பர்களுடன் செல்ஃபி க்ளிக் செய்ய 32 எம்பியில் ஒரு கேமரா என அசத்துகிறது இந்த போன். இதன் ஸ்பெஷலாக ஃபிங்கர் பிரின்ட் வசதியைச் சொல்கிறார்கள்.

0.48 நொடிகளில் போனை அன்லாக் செய்கிறது இந்த ஃபிங்கர் பிரின்ட். 22W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4500mAh பேட்டரி திறன், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இரண்டு பதிப்பு களில் இந்த போன் கிடைக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மாடலை களமிறக்கியுள்ளது ‘விவோ’. இதன் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம்.