அதிசய சம்பவம்



எழுபத்தி மூன்று வயதான பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? ‘‘முடியும்...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுவதுடன் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தும் இருக்கிறார் மங்காயம்மா. 73 வயதான இவர்தான் இன்று இணையத்தில் ஹாட் வைரல்.
‘‘நானும் என் கணவரும் குழந்தை வேண்டுமென்று திருமணம் ஆன புதிதில் இருந்து வேண்டினோம்.

இப்போது தான் எங்களின் கனவு கை கூடியிருக்கிறது...’’ என்கிற மங்காயம்மாவின் கணவருக்கு வயது 82.ஆந்திரப்பிரதேசத் தைச் சேர்ந்த மங்காயம்மாவும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின்மையின் காரணமாக மங்காயம்மா வாழ்ந்த  கிராமத் தில் பெரிதும் புறக் கணிக்கப் பட்டிருக்கிறார். செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் இப் போது அம்மாவாகிவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக் கிறார். 2016-இல் தல்ஜிந்தர் கவுர் என்ற பெண் 70 வயதில் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத் தார். இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்.