வைரல் சம்பவம்ஒரு காலத்தில் டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார் என்பது வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தது. இப்போது டிரைவர் இல்லாமல் இயங்கும் ஆட்டோமேட்டிக் கார்கள் வந்துவிட்டன. இதே மாதிரியான ஒரு சம்பவம்தான் இது. மழை பயங்கரமாக பொழிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்துக்கும் வீட்டுக்கும் 300 மீட்டர் தான் இடைவெளி. ஒரு குடையிருந்தால் வீட்டுக்குப் போய்விடலாம். அந்தக் குடையை நீங்கள் கையால் பிடிக்க வேண்டியதில்லை.

நீங்கள் நடக்கும்போது அதுவும் உங்களுடனே வரும். மழை உங்கள் மீது விழாமல் பாதுகாக்கும். நீங்கள் நிற்கும் இடத்தில் குடையும் நின்றுகொள்ளும். கையை வீசிக்கொண்டு ஜாலியாக நீங்கள் நடக்கலாம். இப்படியொரு குடை இருந்தால் எப்படியிருக்கும்? இதெல்லாம் சாத்தியமா? என்று நாம் கேட்பதற்குள் அந்த மேஜிக் குடையை உருவாக்கிவிட்டார் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு மேஜிக் வித்தகர். இந்தக் குடையைப் பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.