புதிய முயற்சி



கொசு மூலம் பரவும் நோய்களில் முக்கியமானது மலேரியா.  இந்த நோயினால் ஒவ்வொரு வருடத்துக்கும் நான்கு முதல் ஏழு லட்சம் பேர் வரைக்கும் உயிரிழக்கின்றனர். தவிர, ஒவ்வொரு வருடமும் 20 கோடிப்பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். அங்கே நிலவும் சுகாதார சீர்கேடுதான் இதற்கு முக்கிய காரணம்.

சமீபத்தில் ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் மலேரியாவைப் பரப்பும் கொசுவை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்ற பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் நடந்த இந்தப் பரிசோதனையில் சிலந்தியின் நஞ்சிலிருந்து மலேரியா வைப் பரப்பும் கொசுக்களை அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பை நடைமுறைப் படுத்தி புர்கினா பசோவில் உள்ள 99 சதவீத மலேரியா கொசுக்களை அழித்துவிட்டனர்.

‘‘கொசுக்களைக் கூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. இங்கே மலேரியா பரவுவதைத் தடுக்க முயற்சிக்கிறோம்...’’ என்று நுட்பமாக சொல்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தப் புதிய முயற்சி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.