கேலக்ஸி போன்



வெகு நாட்களுக்குப் பிறகு ‘சாம்சங்’ நிறுவனம் ‘கேலக்ஸி எம் 40’ என்ற புதிய மாடல் போனை ஜூன் மாதம் சந்தையில் அறிமுகப் படுத்தப்போகிறது. அதற்குள் இந்தப் போனில் புதிதாக என்னென்ன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, போனின் வடிவம் எப்படியிருக்கிறது, விலை போன்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகிவிட்டது.

ஏற்கனவே ‘எம் 10’, ‘எம் 20’, ‘எம் 30’ என மூன்று மாடல்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டன. கேலக்ஸி மாடல் களில் இந்த ‘எம்’ சீரிஸ் போன்கள் விலை மலிவு என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் இதன் விற்பனை அதிகம்.

அதனால் இப்போதிருந்தே ‘எம் 40’-க்கு காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். 6.3 இன்ச்சில் மெகா சைஸ் சூப்பர் ‘AMOLED’ டிஸ்பிளே மற்றும் ஹை ரெசல்யூசன்,  பிக்சரின் தரத்தை மிக தெளிவுடன் காட்ட ஃபுல் ஹெச்.டி வசதி, ‘எம்’ சீரிஸ் போன்களில் முதல் முறையாக ஸ்நாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர்.

தவிர, 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், வேண்டுமானால் 512 ஜிபி வரைக்கும் மெமரியை நீட்டித்துக் கொள்ளும்  வசதி, அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்ட மூன்று போன்கள், இதில் மெயின் கேமரா 48 எம்பி திறன் கொண்டது. ஒரு நாள் முழுவதும் நிற்கும் பேட்டரி திறன், எடை குறைவு, மெலிதான வடிவமைப்பு, அவ்வளவு சீக்கிரத்தில் உடையாத கொரில்லா கிளாஸ் ஸ்க்ரீன் என இதன் அம்சங்கள் அசத்துகின்றன. விலை மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 20 ஆயிரத்துக்குள் இருக்கலாம் என்று டிஜிட்டல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.