வறட்சிசிறுவர்கள் நடந்து செல்லும் இடத்தைப் பார்த்ததும் ஏதோ வறட்சியான நிலம் என்று நினைப்பீர்கள். ஆனால், இது செம்பரம்பாக்கம் ஏரி.  ஆம்; 15 வருடங்களுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி முழுவதுமாக வறண்டுவிட்டது.
அதன் வறண்ட படுகையில் தான் சிறுவர்கள் ஒய்யாரமாக நடந்து செல்கிறார்கள். வடகிழக்குப் பருவ மழை சரியாகப் பெய்யாததுதான் இதற்குக் காரணம். அத்துடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு.