கண்ணாடிப் பாலம்சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளது ஹுவாக்சி சாகச பூங்கா. அங்கே இரு மலைகளின் உச்சியை இணைக்கும் விதமாக ஒரு பாலத்தை அமைத்திருக்கிறார்கள். நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் படியாக காட்சியளிக்கிறது அந்தப் பாலம். இதன் அடிப்பாகம் 3.5 செ.மீ தடிமன் உள்ள கண்ணாடியால் ஆனது.

518 மீட்டர் நீண்டு செல்லும் இக்கண்ணாடிப் பாலம் சுமார் 2600 பேரைத் தாங்கும்  திறன் கொண்டது. இதில் நடந்துசெல்வதே ஒரு சாகசம் தான். ‘‘மென்மையான இதயம் கொண்டவர்கள் கீழே பார்க்காதீர்கள்...’’ என்ற வாசகத்துடன் இந்தக் கண்ணாடிப் பாலத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது. கடந்த வாரத்திலிருந்து இதில் சாகச நடை போக பொது மக்களும் அனுமதிக்கப் படுகின்றனர்.