கனவுக் கோட்டை



வாழ்க்கையில் எப்படியாவது ஒரு கோட்டையைக் கட்ட வேண்டும் என்பது லெபனானைச் சேர்ந்த சிறுவன் மௌசா அல் மாமரியின் கனவு. வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்காமல் தன் கனவுக் கோட்டையை வரைவது அவனின் வழக்கம். ஒரு நாள் அது ஆசிரியரின் கண்ணில் பட,  சக மாணவர் களின் முன்பு மௌசா தண்டிக்கப்படுகிறான். அத்துடன் ஆசிரியர் அவ னின் கனவை உதாசீனப் படுத்துகிறார்.

எதற்கும் துவண்டு போகாமல் தன் கனவை முப்பது வருடங் களாகப் பின்தொடர்ந்து வந்து தனியாளாகவே ஒரு பிரமாண்டமான கோட்டையைக் கட்டி எழுப்புகிறார் மௌசா. சுமார் 3,500 சதுர  மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் அக்கோட்டைக்கு ‘மௌசா கோட்டை’ என்று பெயரிட்டு 1969-இல் திறக்கிறார். இன்று லெபனானின் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் மௌசா கோட்டைக்குத் தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகை

புரிகின்றனர்.