வைரல் சம்பவம்



‘‘மகேந்திரசிங் டோனி டாஸ் ஜெயித்தால் எதை தேர்ந்தெடுப்பார்..?’’ - இப்படியொரு கேள்வி உங்களின் பள்ளி அல்லது கல்லூரி தேர்வுக்குக் கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்களா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. ஆனால், கேட்டு விட்டார்களே... அதுவும் ஐஐடியில்.

கடந்த வாரம் ஐஐடி மெட்ராஸில் செமஸ்டர் தேர்வு முடிந்தது. அதில் மெட்டீரியல் அண்ட் எனர்ஜி பேலன்சஸ் பாடத்துக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒரு பகுதி கேஸ் ஸ்டடியை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கேஸ் ஸ்டடி யில் முக்கிய கேள்வியே ‘‘மகேந்திரசிங் டோனி டாஸ் ஜெயித்தால் எதை தேர்ந்தெடுப்பார்..?’’ என்பதுதான்.

இந்தக் கேள்வித்தாள் இணையத்தில் வெளியாக, வைரலாகிவிட்டது. ‘‘ நான் படிக்கும்போது இந்த மாதிரியான கேள்வியை யாரும் கேட்கவில்லையே...’’, ‘‘லெஜண்டரி கொஸ்டீன்...’’ போன்ற கிண்டல் கமென்ட்டுகள் குவிகின்றன. இன்னும் டோனிக்கு இந்தக் கேள்வித்தாள் சென்றடையவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.