செஸ்டர் உயிரியல் பூங்காஉலகின் தலைசிறந்த மூன்றாவது உயிரியல் பூங்கா செஸ்டர். இங்கிலாந்தில் செசையர் கவுண்டியில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்தப் பூங்கா. கடந்த வருடம் மட்டும் சுமார் 2 கோடிப்பேர் செஸ்டரைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கின்றனர். உலகிலேயே முதல் முறையாக டைனோசர், ராட்சத பாம்பு, கூரிய பற்களைக்கொண்ட புலி போன்ற அழிந்து போன  பிராணிகளின் அனிமேட்ரானிக் கண்காட்சி இங்கே நடக்கவிருக்கிறது.

ரோபோக்கள் போல  அனிமேட்ரானிக் செய்யப்பட்ட பிராணிகள் இயங்கும். இந்த அனிமேட்ரானிக் பிராணிகளைப் பிரத்யேகமாக அமெரிக்காவில் வடிவமைத்திருக்கிறார்கள்.
‘‘இந்தக் கண்காட்சி மூலம் பார்வையாளர்களுக்கு அழிந்துபோன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்...’’ என்கின்றனர் பூங்காவின் நிர்வாகிகள்.