மெகா மின்சார உற்பத்திஅரேபியக் கதிரவனுக்குக் கீழ் மாபெரும் நினைவுச்சின்னம் மேலே எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்; துபாயின் தென்பகுதியில் கட்டப்பட்டு வரும் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பூங்கா தான் அந்த நினைவுச்சின்னம். ஆறு வருடங்களுக்கு முன் 77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 13.6 பில்லியன் டாலர் செலவில் இந்த புரொஜெக்டை ஆரம்பித்தனர்.

சூரிய வெளிச்சத்தில் இருந்து சோலார் தகடுகள் வழியாக மின்சாரத்தை உற்பத்தி செய்வது இதன் நோக்கம். துபாயின் மின்சாரம் மற்றும் நீர் துறை இதற்கு அடித்தளமிட்டது. இங்கிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை 130 கோடி வீடுகளுக்கு சப்ளை செய்ய முடியும். சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பதால் வருடத்துக்கு 6.5 மில்லியன் டன் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

இன்னும் சில வருடங்கள் இந்தக் கட்டடத்தின்  பணி முழுமையாக முடிந்துவிடும். சமீபத்தில் இந்தப் பூங்காவைச் செயற்கைக்கோள் படம்பிடித்திருந்தது. அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.