126 மணி நேரம் தொடர் நடனம்!உங்களால் எவ்வளவு நேரம் இடைவிடாமல் தொடர்ந்து நடனமாட முடியும்? ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் இரண்டு, மூன்று மணி நேரம் என்ற பதில்தான் பெரும்பாலும் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன் ‘கேரளாவின் நடன அரசி’ என்று புகழப்படுகிற ஹேமலதா 123 மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து கிளாசிக்கல் நடனமாடி கின்னஸ் சாதனை புரிந்தார்.

அப்படி அவர் நடனமாடும்போது ஒரு நிமிடம் கூட இடைவெளி விடவில்லை என்பது தான் அதில் ஹைலைட். இந்தச் சாதனையை நேபாளைச் சேர்ந்த பந்தனா என்ற 18 வயதுப் பெண் முறியடித்து விட்டார். காட்மண்டுவில் உள்ள ஒரு இடத்தில் தொடர்ந்து 126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடியிருக்கிறார் பந்தனா. ‘உலகில் அதிக நேரம் இடை விடாமல் நடனமாடியவர்’ என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டார் பந்தனா.