ராட்சசன்அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி அமைதியாகப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற போராளிகள் பெரு நிறுவன முதலாளிகளின் கேலிச்சித்திரத்தை கையில் ஏந்தி வலம் வந்தனர். அதில் ‘அமேசான்’ நிறுவனத்தின் சேர்மன் ஜெஃப் பெஸோஸின் உருவப்படம்தான் ஹைலைட். அவரை மனிதத் தன்மையற்ற ஒரு ராட்சத ரோபோ போல சித்தரித்திருந்தது அந்தப் படம்.