உருளைக்கிழங்கு வீடுநமக்குப் பிடித்த காய்கறிகளால் ஆன வீட்டில் வசிப்பது மாதிரி கனவு கண்டிருப்போம். ஒருவேளை உங்களுக்கு உருளைக்கிழங்கு பிடித்திருந்தால் நீங்கள் கண்ட கனவு நிஜமாக வாய்ப்பிருக்கிறது.
ஆம்; அமெரிக்காவில் இடாகோ மாகாணத்தில் உருளைக்கிழங்கு வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். 28 அடி நீளம், 12 அடி அகலம், 11.5 அடி உயரம் கொண்ட உருளைக்கிழங்கு வீட்டில் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் சுமார் 14 ஆயிரம் ரூபாய். ஆனால், இது நிஜ உருளைக் கிழங்கு அல்ல; ஸ்டீல் மற்றும் பிளாஸ்திரியால் வடிவமைக்கப்பட்ட செயற்கை உருளைக்கிழங்கு இது.