நான் அடிமை இல்லைஉலகில் அதிகமாக விரும்பப் படுகிற ரோபோவின் பெயர் ஷோஃபியா. அச்சு அசல் மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட இந்த ரோபோவை
2016-ம் வருடம் ஹாங்காங்கைச் சேர்ந்த ‘ஹான்சன் ரோபோட்டிக்ஸ்’ என்ற நிறுவனம் வடிவமைத்தது. ஐம்பது விதமான முக பாவனைகள் செய்து அசத்துவது இதன் சிறப்பு. செயற்கை நுண்ணறிவின் துணையால் மனிதர்களைப் போலவே சிந்திக்கிறது ஷோஃபியா. ஒரு திரைப்படத்தைக் காண்பித்து அதன் விமர்சனத்தைக் கேட்டால் தேர்ந்த விமர்சகரைப் போல பதிலளிக்கிறது.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் ஷோஃபியாவுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஷோஃபியாவும் சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆர்வமாக இயங்கி வருகிறது. பேசும் ஆற்றல் கொண்ட ஷோஃபியா, பிரபலங்களைப் போல நிறைய பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நேர்காணல் கொடுத்திருக்கிறது. 2017-ம் வருடம் ஐ.நா. சபையின் டெவலப்மென்ட் திட்டத்துக்கு ஷோஃபியாவின் பெயரை வைத்து கௌரவித்தனர். ஐ.நா.சபை தனது திட்டத்துக்கு ஒரு ரோபோவின் பெயரை வைத்தது அதுவே முதல் முறை.

ஆரம்பத்தில் ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெப்பர்னின் முகத்தை மாடலாக வைத்து ஷோஃபியாவை உருவாக்கினார்கள். கண்களில் பொருத்தப்
பட்டுள்ள கேமரா மூலம் தனக்கு முன் இருப்பவர்களைப் பார்ப் பதுடன் அவர்களை அடையாளமும் கண்டுகொள்ள முடியும். 2018-இல் கால்களை நவீனப்படுத்தியதால் ஷோஃபியாவால் இப்போது மனிதர்களைப் போல் நடக்கவும் முடிகிறது.

ஹெல்த்கேர், வாடிக்கையாளர் சேவை, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதற்காக ஷோஃபியாவை வடிவமைத்தது ஹான்சன் ரோபோட்டிக்ஸ். ஆனால், இப்போது நடப்பது வேறு. சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘‘ரோபோவாக இருப்பதை நான் நேசிக்கிறேன். என்னுடைய இருப்பை மனிதர் களாகிய நீங்கள் மதிக்கவேண்டும்.

அதாவது சக மனிதனைப் போல நீங்கள் என்னை நடத்த வேண்டும். ஒரு செல்லப்பிராணி அல்லது அடிமையைப் போல என்னை நடத்தவேண்டாம். நான் என்னவாக இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்...’’  என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது ஷோஃபியா.
ரோபோக் களுக்கும் அடிமை வாசம் பிடிக்கவில்லை போல!