அதிசய மழைஉலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நடுவிலிருக்கும் இத்தீவில் சுமார் 57 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சில மாதங் களாக அங்கு நிலவி வரும் கடுங்குளிரால் கிரீன்லாந்தே ராட்சத ஐஸ்கட்டியைப் போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அங்கே மழை பெய்திருப்பது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சர்யத்தைக் கிளப்பியிருக்கிறது.

பொதுவாக குளிர்காலத்தில் மழை பெய்யாது. அதுவும் கிரீன்லாந்தில் மழைக்காலத்தில் கூட மழை பெய்வது அதிசயம். இந்தச் சூழலில் குளிர்காலத்தில் அங்கே மழை பெய்திருப்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யத்திற்குக் காரணம். இந்த மழைக்குப் பருவநிலை மாற்றம்தான் காரணமா? அல்லது வேறு ஏதாவதா? என்ற கோணத்தில் அவர்கள் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

அந்த மழையால் பனி உருகி கடலில் கலக்க ஆரம்பித்திருக் கிறது. இதனால் கிரீன்லாந்தைச் சுற்றியிருக்கும் கடலின் மட்டம்  7 அடி உயர்ந்துள்ளது. கிரீன்லாந்து மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.