வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஏன் குலுக்கவேண்டும்?



ஏன்? எதற்கு? எப்படி?

பொதுவாக வாசனைத் திரவியத்தை நம் உடலின் மீதோ அல்லது ஆடையின் மீதோ தெளிக்கும் முன்பு ஒரு குலுக்கு குலுக்குகிறோம். குலுக்காமல் தெளிக்கும்போது கிடைக்கும் வாசனையைவிட குலுக்கியபின் கிடைக்கும் வாசனை ரொம்பவே அலாதியானது. ஆனால், குலுக்குவதற்கு இது மட்டும் காரணமல்ல. வாசனைத் திரவியத்தைத் தயாரிக்க குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

வாசனைத் திரவியம் தயாரான பிறகே அதை குடுவையில் அடைக்கின்றனர். குடுவையில் அடைத்தபிறகும் கூட அந்த மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் அப்படியே அடுக்கடுக்காக வரிசையில் நிற்கும். அதனாலேயே அவற்றைக் குலுக்குகிறோம்.  சில வாசனைத் திரவியத்தைக் குலுக்காமல் பயன்படுத்தும்போது எந்த வாசனையும் நமக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.