இளஞ்சிவப்பு ஏரிமெல்போர்னில் உள்ளது வெஸ்ட்கேட் பார்க். அங்குள்ள உப்பு ஏரி ஒன்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி ஆச்சர்யமளிக்கிறது. சாயப்பட்டறையிலிருந்து வெளியாகும் கழிவு நீர் ஏரியில் கலந்துவிட்டதோ என்ற சந்தேகம் வரலாம்.
ஆனால், இது இயற்கையின் அதிசய விளையாட்டு. ஆம்; தண்ணீரில் அதிகரித்த உப்பின் அளவு, குறைவான மழை, சூரிய வெளிச்சம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக உப்பு ஏரியில் உள்ள நீர் இளஞ்சிவப்பாக மாறிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் ஏரியின் முன் நின்று செல்ஃபி எடுக்கின்றனர்.