பைக்கில் உலகை வலம் வந்த பெண்!



ஃபேஷன் டிசைனர், மார்க்கெட்டிங் நிபுணர், மாடல், பைக் ரைடர், பேச்சாளர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் மரல் யாசர்லூ. 365 நாட்களில், ஐந்து கண்டங்களிலுள்ள 25 நாடுகளை பைக்கிலேயே வலம் வந்து சாதனை புரிந்திருக்கிறார் மரல். சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர்  தூரம்  பயணித்திருக்கிறார்.

‘‘பைக்கிடம் எந்தவித பாலின பாகுபாடும் இல்லை...’’ என்கிற மரல் ஈரானில் பிறந்தவர். பெண்கள் பைக் ஓட்ட தடை செய்யப்பட்ட ஒரு நாடு ஈரான். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட மரல், மேற்படிப்புக்காக இந்தியா வந்தார். படிப்பை முடித்த கையோடு நல்ல வேலையும் அவருக்குக் கிடைத்தது.

கையில் கொஞ்சம் பணம் சேர, தனது கனவுப் பயணத்தை புனேவில் இருந்து ஆரம்பித்தார். இரவு நேரங்களில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பைக்கில் பறந்திருக்கிறார் மரல். குறுகிய நாட்களில் பைக்கில் உலகை வலம் வரவேண்டும் என்பது மரலின் அடுத்த இலக்கு.