Mini முத்தாரம்



பெரு நிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்தை எம்முறையில் செயல் படுத்தியுள்ளன?

2013-இல் இருந்து கம்பெனிகள் சட்டப்படி சில நிறுவனங்கள் சிஎஸ்ஆர் செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் இதற்காக ஒதுக்கப் படும் நிதி 95.4 பில்லியன் டாலர் களிலிருந்து 138.28 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை கட்டாய சட்டமாக்கும்போது மேலும் பல்வேறு நிறுவனங்கள் இச்செயல்பாட்டை மேற்கொள்வார்கள்.

அரசுடன் இணைந்து செயல்படுவது இதில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்தியாவில் மக்கள் நல திட்டங்களை பெருமளவில் முன்னெடுப்பது அரசு தான்.ஆனால், அதனை ஊக்கமாகச் செய்வதில்லை. பெரு நிறுவனங்கள் அரசுடன் இணையும்போது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எளிதாக தீர்க்கமுடியும். ‘கேர்மதர்’ திட்டத்திற்கு ‘மோட்டரோலா’ நிதியுதவி வழங்கியது கர்ப்பிணிகளுக்கு உதவியாக இருந்தது.

ஆந்திராவில் ‘ரெக்கிட் பென் கிஸர்’ நிறுவனம் இம்முறையில் சுகாதாரப் பணிகளைச் செய்கிறது.பெருநிறுவனங்கள்  பிராண்டு விளம்பரத்திற்காக சமூக நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனவா?

‘டிஹெச்எஃப்எல்’ நிறுவனமும் எங்களுடைய ‘சம்ஹிதா’ நிறுவனமும் இணைந்து திறன் மேம்பாட்டு செயல்பாடுகளை வழங்குகி றோம். இது வங்கித் துறைக்கு தேவையான பணியாளர்கள் கிடைப் பதற்கும் பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பு தருகிறது.

-பிரியா நாயக், சி.இ.ஓ. (சம்ஹிதா குட் சிஎஸ்ஆர்).