கூகுள் தேடலில் முதலிடம்!உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறது இந்த தலைமுறை. அதனால் பேலியோ, வேகன் என்று  ஏகப்பட்ட டயட்கள் வரிசை கட்டுகின்றன. கடந்த வருடம் ‘கூகுளி’ல் மருத்துவம் தொடர்பான தேடல்களில்
முதலிடம் பிடித்ததே ‘கீட்டோ’ என்ற டயட் தான்.

‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி முதல் ஆபாசப் பட நட்சத்திரம் ஜென்னா ஜெமிஸன் வரை பிரபலங்கள் பலரும் இந்த டயட்டை பின்பற்றி உடல் எடையைக் குறைத்திருப்பதால் இதற்கு தனி மவுசு. 80% கொழுப்பும், 15% புரத மும்,  5% கார்போஹைட்ரேட்டும் கலந்த கீட்டோ அசைவ  உணவிற்கு அதிக  முக்கியத்துவம் தருகிறது.

 ஃபாஸ்டிங் இதில் கட்டா யம். தண்ணீரையும் குறை வாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கீட் டோவை எல்லோராலும் தொடர முடிவதில்லை.‘‘வலிப்பு நோயினால் பாதிக் கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு உணவுக்கட்டுப்பாடு இது...’’ என்கிறது மருத்துவ உலகம்.