தொலைக்காட்சி எப்படி நம்மை அடிமைப்படுத்துகிறது?



ஏன்? எதற்கு? எப்படி?

தொலைக்காட்சி சேனல்கள் தொடர்கள் வழியாக நம்மை அடிமைப்படுத்த சில உளவியல் முறையைக் கையாள்கின்றன. சாதாரணமாக ஒருவர் வெளியுலகை எதற்கு நாடுகிறார்? பல்வேறு உறவுகளுடன் பேசுவதற்குத்தானே. மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தொடர்களில் பல கேரக்டர்களைப் புகுத்தி அவர்களின் நிஜ உலகை மறக்க வைக்கின்றன டி.வி சேனல்கள்.

இதுவே தொலைக்காட்சியின் வெற்றி. சோபாவில் அமர்ந்தாலே போதும், உலகின் அத்தனை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசும். பிறகு எப்படி நம்மால் நிஜ உலகத்திற்குள் நுழைய முடியும்?