வேகமாக உலகைச் சுற்றிய பெண்‘மூன்று வருடங்கள், மூன்று மாதங்களுக்குள் இந்த உலகில் உள்ள அனைத்து இறையாண்மை நாடுகளுக்கும் போக வேண்டும்’ என்ற லட்சியத்துடன் களமிறங்கிய கஸன்ட்ரா டி பிகல், ஒன்றரை வருடத்தில் 196 நாடு களுக்கு விசிட் அடித்து ‘வேகமாக உலகைச் சுற்றிய பெண்’ என்று வரலாற்றிலும் இடம்பிடித்து விட்டார்.

ஒவ்வொரு நாட்டிலும் 2 முதல் 5 நாட்கள் பயணம் செய்திருக்கிறார். ரயில்வே பிளாட்பார்ம் போல கிடைத்த இடங்களில் தங்கி பயணத்தைத் தொடர்ந் திருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலமாக கிடைத்த நண்பர்கள், சுற்றுலா நிறுவனங்கள் என உதவிகள் கிடைத்தன. 250 ஃபிளைட் டிக்கெட், 4 பாஸ்போர்ட், விசா நடைமுறைகள், உணவு, தங்குமிடம் என சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய் திருக்கிறார்.

‘‘வகை வகையான மனிதர் களைச் சந்தித்துவிட்டேன். வகை வகையான உணவுகளை ருசித்து விட்டேன். வகை வகையான இடங்களைப் பார்த்துவிட்டேன். யாருமே என்னை அந்நியமாகப் பார்க்கவில்லை. எல்லோருமே அமைதியாக வாழவே விரும்புகின்றனர். பிரச்னை எங்கிருந்து உருவாகிறது என்றுதான் தெரியவில்லை’’ என்று குழந்தையைப் போல சொல்கிறார் பிகல்.