Mini முத்தாரம்



நீங்கள் லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்தபோது சந்தித்த வழக்குகளைக் கூறுங்கள்?  

என்னுடைய பதவிக்கால மான 2006-2011 வரை 23 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளோம். சுரங்க அதிபர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை அதிகம் சந்தித்தேன்.
 
2016 ஆம் ஆண்டு தொடங்கியஊழல் எதிர்ப்பு அமைப்பு, லோக் ஆயுக்தாவை பலவீனப்படுத்தியதா?
 
2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரசின் சித்தராமையா, தன்னிச்சையாக ஊழல் எதிர்ப்பு அமைப்பை((ABC) உருவாக்கி, அதிகாரங்களை வழங்கினார். அரசு அனுமதியின்றி அதிகாரிகளை விசாரிக்க முடியாதென்ற கட்டுப்பாடுகளும் இதற்கு உண்டு.
 
ஊழலில் தண்டிக்கப்படும் அளவு என்ன?  

20% மட்டுமே. இந்தியா முழுக்கவுமே ஊழல் தடுப்பு செயல்பாடு மந்தம்தான்.
 
நிலைமை மாறும் என நம்புகிறீர்களா?  

மாறும் என நம்புகிறேன். ஆனால் எப்போது என கேட்காதீர்கள். மாறாதபோது இந்தியாவில் அமைதி சாத்தியமில்லை.

-என்.சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் நீதிபதி.