உளவியல் விநோதங்கள்!



அதிசய சிறுவன்!  

1800 ஆம் ஆண்டு பிரான்சின் அவெய்ரோன் காட்டில் வாழ்ந்த பனிரெண்டு வயது சிறுவனை மருத்துவர் ஜீன் மார்க் காஸ்பர்ட் இடார்ட் கண்டுபிடித்தார். பெரும் மரங்களுக்கு இடையே வாழ்ந்த விக்டர் என்ற அச்சிறு வனுக்கு பேசத்தெரியவில்லை. நாகரீக பழக்கங்களைக் கற்றுத்தரும் முயற்சியும் தோல்வியடைந்ததால்  ஆட்டிச பாதிப்பு இருக்கலாம் என கருத்து சொன்னார்கள் மருத்துவர்கள்.
 
மனைவியா? தொப்பியா?  

நரம்பியல் மருத்துவர் ஆலிவர் சேக்ஸ், தான் எழுதிய  “The Man Who Mistook His Wife For A Hat” நூலில் டாக்டர் பி என்பவரின் பொருட்களையும் மனிதர்களையும் குழப்பிக்கொள்ளும் மனிதரைப் பற்றி எழுதியிருந்தார். டாக்டர் பி என்பவருக்கு மனிதர்களுக்கு பதிலாக பொருட்கள்(மனைவி-தொப்பி) தெரிந் ததுதான் பிரச்னை.  
 
டிராகன் அபாயம்!  

2014 ஆம் ஆண்டு வெளியான லான்செட் இதழில், 52 வயது டச்சுப்பெண்மணிக்கு சுவர், தரை, மனிதர்களின் முகம் என எங்கு பார்த்தாலும் கருப்பு டிராகன் தெரிந்தது. டொரண்டோவைச் சேர்ந்த உளவியலாளர்கள் பெண்ணால் சாப்பிடப்படுவதாக கற்பனை செய்துகொள்ளும் ஸ்டீபன் என்ற மனிதரை ஆராய்ச்சி செய்து கதி கலங்கிய வரலாறும் உண்டு.