பிட்ஸ்



*விண்டோஸ் ஓஎஸ் தொடங்கும்போது ஒலிக்கும் வரவேற்பு ஒலி, ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ்ஸிற்காக உருவாக்கப்பட்டது.
 
*பிரச்னைக்கான தீர்வு, பிரச்னையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் அதற்கு கோப்ரா விளைவு (Cobra Effect) என்று பெயர்.
 
*நிலவில் அப்போலோ 11 விண்கல வீரர்கள் ஊன்றிய அமெரிக்க தேசியக்கொடி சியர்ஸ் எனும் கடையில் 5.50 டாலர்களுக்கு (ரூ.390) வாங்கப்பட்டது.
 
*விண்வெளியில் வீரர்கள் அழுதாலும் கண்ணீர் கீழே விழாது; காரணம், புவி ஈர்ப்பு விசை இல்லாததுதான்.
 
*பிரேக்கிங் நியூஸ் மற்றும் ஏராளமான கிசுகிசுக்கள், வதந்திகளைத் தேடித்தேடி படிப் பவர்களுக்கு Quidnunc என்று பெயர்.
 
1993 ஆம் ஆண்டு அமெரிக்கா ஊறுகாய் ஆராய்ச்சிக்கென செலவு செய்ததாக கணக்கு காட்டிய தொகை 2,77,000 டாலர்கள்.