நான்சி பெலோசி



அமெரிக்காவின் மக்கள வைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் சிறுபான்மையினருக்கான ஜனநாயகக் கட்சி பெண் உறுப்பினர் நான்சி. 1987 ஆம் ஆண்டிலிருந்து அவை உறுப்பினராக செயல்பட்டுவரும் சாதனை வரலாறு இவருடையது. இத்தாலி-அமெரிக்க குடும்ப பாரம்பரியம் கொண்ட நான்சி, 1940 ஆம் ஆண்டு மேரிலாண்டில் பிறந்தார்.

பள்ளிப்படிப்பை நாட்டர்டாம் பெண்கள் பள்ளி யிலும், அரசியல் அறிவியல்  பட்டப்படிப்பை டிரினிட்டி கல்லூரியிலும் படித்து முடித்த  நான்சி,  சான்ஃபிரான்சிஸ்கோ சென்று ஜனநாயகக் கட்சியில் இணைந்தார்.

 “பொதுமக்களுக்கான கடமைகளை அறிய ஜனநாயகக் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்த என் தாயும் தந்தையும்தான் என் வழிகாட்டிகள். திருமணமாகி ஐந்து குழந்தைகள் இருக்கும்போது, அரசியல் பொறுப்பு, சவால்களைப் பற்றி கேட்காமல் குடும்பங்களை கவனிக்கவில்லையா? என்கிறார்கள். குழந்தைகள் என்னை கவனித்துக்கொள்கிறார்கள்” என தீர்க்கமாக பேசுகிறார் நான்சி பெலோசி.

“நீங்கள் பிறருக்கு ரோல்மாடலாக இருக்கலாம். உங்களுக்கு  உண்மையாக சமரசமற்று இருப்பதே நீங்கள் வாழ் வதன் லட்சி யம். உங்களு டைய நேர்மையான ஆளுமையின் சிறப்பே நாட்டை வலுவாக்கும்”’ எனும் நான்சி பெலோசி பாலின சமத்துவத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.