ஒரு படம் ஒரு ஆளுமை



தி ஃப்ளோரிடா ப்ராஜெக்ட்

சூழலும் வளர்ப்பும் குழந்தை களின் அக உலகை எப்படி கட்டமைக்கின்றன என்பதை ஆழமாக சித்தரிக்கிறது ‘தி ஃப்ளோரிடா ப்ராஜெக்ட்’. வால்ட் டிஸ்னி வேர்ல்டு தீம் பார்க்கிற்கு அருகி லிருக்கும் விடுதியில் அம்மா ஹேலியுடன் வசித்து வருகிறாள் மோனி. பொறுப்பற்று ஹிப்பி போல வாழும் அம்மா ஹேலி, மோனிக்கு தந்தை பற்றிய தகவலைக் கூறுவதில்லை. மோனிக்கு    ஜான்சி என்ற தோழி அறிமுகமாக, கவலையின்றி ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள்.

தங்கியுள்ள அறைக்கு வாடகைப்பணம் தர, பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள் ஹேலி. இந்த விஷயம் விடுதி உரிமையாளருக்குத் தெரியவர, விடுதியில் இருந்து காலி செய்ய நெருக்குகிறார்கள்.  இன்னொருபுறம், மோனியை தாயிடமிருந்து பிரித்து ஃப்ளோரிடோ குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்.  

இந்தக் களேபரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மோனி என்ன ஆனாள்? என்பது மீதிக்கதை. டிஸ்னி வேர்ல்டுக்கு அருகில் வாழ்ந்தாலும் அதற்குள் நுழையக்கூட பணமில்லாத மனிதர்களின் இருண்ட வாழ்வை படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் சீன் பேக்கர்.ஜே.கே.ரௌலிங்வயது வித்தியாசமின்றி  அனைவரையும் கட்டிப்போட்ட வரலாறு கொண்டது ஹாரிபாட்டர் சீரிஸ்.

சினிமாவாக எடுக்கப்பட்டு வசூலில் சக்கைப்போடு போட்டது. ஆனால், இதன் ஆசிரியர் ஜே.கே. ரௌலிங்கின் முந்தைய வாழ்க்கையோ தோல்வி களாலும், வறுமையாலும் துவண்டு போன ஒன்று. விவாகரத்து, தற்கொலை முயற்சி, ஏழ்மை, அம்மாவின் மரணம்  என்று பல தடைக்கற்களைக் கடந்து தான் ரௌலிங் எழுத்தாளரானார். 1965-ல் மேற்கு இங்கிலாந்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ரௌலிங்கின் இயற்பெயர் ஜோன்னே.

சிறுவயது முதலே கதைசொல்லியான ரௌலிங், அனுபவ மனிதர்களின் சாயல் களைக் கொண்டே ஹாரிபாட்டர் கதாபாத்திரங்களை வடி வமைத்தார். ஒரு பதிப்பக உரிமையாளரின் 8 வயது மகளுக்கு  ஹாரிபாட்டர் கதை பிடித்ததால் அது அச்சில் வெளியானது. இதுவரைக்கும் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்று 700 கோடி பவுண்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

லிஜி