ஐரோப்பாவின் பிரைவசி விதிகள்!



ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட டெக் நிறுவனங்களை முறைப்படுத்த ஐரோப்பிய யூனியன் ஜிடிபிஆர் (General Data Protection Regulation, or GDPR)  விதிகளைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. மே 25 முதல்  இவ்விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.

சேகரித்துள்ள விதிகளை பயனர்கள் பார்க்கவும், அழிக்கவும் நிறுவனங்கள் செய்யாத போதும் 23.5 மில்லியன் டாலர்கள் அல்லது லாபத்தில் 4 சதவிகிதம் அபராதம் கட்டவேண்டியிருக்கும். அடிப்படை மனித உரிமை என  ஐரோப்பிய  யூனியன் இதனை வரையறுத்துள்ளது.

ஐரோப்பாவைத் தாண்டி செயல்படும் அமெரிக்க நிறுவனங்களையும் ஜிடிபிஆர் விதிகள் கட்டுப்படுத்தும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டுதான் ஐரோப்பாவில் பிரைவசி சட்டங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்விதிகளின்படி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மீது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ் ஸ்ட்ரீம்ஸ் 8.8 பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். Klout, Drawbridge, Verve ஆகிய நிறுவனங்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறவுள்ளன.