Mini முத்தாரம்



‘தனிமையை ஒழிப்போம்’ என்ற பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கான பிரசாரம் பற்றி கூறுங்கள்?  

பாலியல் சீண்டலில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தீவிரமாக கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்கள் தமக்கு நிகழும் அநீதியைச் சொன்னாலும் பெற்றோரே உதவுவதில்லை. பாலினபேதம் பிரிக்காமல் ஒன்றுதிரண்டு இந்த அநீதியை எதிர்ப்போம்.

பழங்குடி இனத்தவர்களில் பெண்களின் யோனியை சிதைக்கும் பழக்கத்தை(FCG) தடுக்கவும் சாஹியோ எனும் என்ஜிஓவை நடத்திவருகிறீர்கள். அம்முயற்சியில் முன்னேற்றம் உள்ளதா?
 
யோனியைச் சிதைக்கும் தாவூதி போரா பழங்குடியின் பழக்கம் மதம் சார்ந்தது. இது சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுகிறது. பழங்குடி மதத் தலைவர்களிடம் உரையாடி அக்கொடிய பழக்கத்தை மாற்ற முயன்று வருகிறோம். இதன் விளைவாக கொலை மிரட்டல், அச்சுறுத்தல்களையும் எங்கள் குழு சந்தித்து வருகிறது. கிளிட்டோரிஸ் தேவையில்லை எனில் இறைவன் ஏன் பெண்குழந்தைகளை அவ்வுறுப்புடன் பிறக்க வைக்கிறார்? என்பதே எங்கள் கேள்வி.
 
வல்லுறவு செய்பவர்களுக்கு மரணதண்டனையை அரசு விதித்துள்ளதே?  

மரணதண்டனை குற்றவாளிகளை அழிக்குமே ஒழிய குற்றங்களை அல்ல.-இன்ஷியா தாரிவாலா, திரைப்பட இயக்குநர்.