சென்னை சீக்ரெட்ஸ்



ஆங்கிலேயரின் நீதிவிசாரணை!

மெட்ராஸில் வணிகத்தைத் தொடங்கியதும் முதல் முதலாக ஒரு கொலைக் குற் றத்தை விசாரித்து தீர்ப்பு வழங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. வடக்குப்புறமாக ஓடிய எலம்பூர் நதியில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்தது. எந்தக் காயமும் இல்லாததால், நீரில் முழ்கி இறந்திருக்க வேண்டும் என முடிவெடுத்து சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவிட்டது கம்பெனி. ஆனால், இந்தப் பெண்ணின் சடலத்தை வெளியில் கொண்டு வந்தவன் மீது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவருக்கு டவுட்.

அவனது வீட்டில் ரெய்டு நடத்தியபோது, அப்பெண்ணின் நகை,  ஆபரணங்கள்  இருந்ததைக் கண்டுபிடித்தனர். பிறகு, அப்பெண்ணைக் கொலை  செய்ததாக அவன் ஒப்புக் கொண்டான். இதை  நாயக்கரிடம்  பிரிட்டிஷார் தெரியப்படுத்தினர். அதற்கு நாயக்கர் பிரிட்டிஷ்  விதிமுறைப் படி தண்டிக்கலாம் என்று தெரிவித்து செய்தி அனுப்பினார்.  

இதனால்,கொலையாளியையும் அவருக்கு உடந்தையாய் இருந்தவரையும் தூக்கிலிட்டது கிழக்கிந்திய கம்பெனி.  இதை,  ‘Vestiges of  Old  Madras’  என்ற  நூலில்  கர்னல் ஹென்றி லவ் குறிப்பிடு கிறார். பூந்தமல்லி நாயக்கர் நீதிப்பொறுப்பை  ஆங்கிலேயர்களிடம் தர, அவர்கள் தம் அதிகாரத்தை  மெட்ராஸில் செலுத்தத் தொடங்கினர்.

பிகே