முத்தாரம் Miniஇந்தியாவில் குடிநீர் குழாய்களை விட செல்போன்கள் அதிகம் என்கிறது சென்சஸ். இந்திய அரசு 1969 முதல் இப்பிரச்னையைத் தீர்க்க முயன்றும் தீர்வு கிடைக்கவில்லையே ஏன்?  

தினசரி  ஒருவருக்கு 40 லிட்டர்  நீர் தேவையை  உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம். கிராமங்களில் நீர்பயன்பாடு பொது- தனியார் விகிதம் 56 சதவிகிதம் எனினும் தனிநபராக வீட்டில் குடிநீர் குழாய் என்பது 17-18 சதவிகிதம்தான். அடிப்படை கட்டுமானம் இல்லாத நிலையில் கிராமங்களில்  தூயகுடிநீர் இன்றும் கனவுதான். நீரை மையப்படுத் தாமல் மக்களுக்கு கொண்டுசெல்வது அவசியம்.
 
குடிநீர் பயன்பாட்டுக்கு கட்டணம் என்பது சரிப்படுமா?  

மாநிலத்தின்  உள்ளூர் நிர்வாகம்  இதற்கான கட்டணத்தை முடிவு செய்துகொள்ளலாம். மத்திய அரசின் அமைச்சகங்கள் இதற்கான முயற்சியை தொடங்கி யுள்ளன.
 
குடிநீர் தட்டுப்பாடு உள்ள  நிலையில் ஸ்வட்ச்பாரத் திட்டம் எப்படி வெற்றிபெறும்?  

சாதாரண நிலையில் கழிவறையில் ஒருமுறை ஃப்ளஷ் செய்தால் 1.5 லிட்டர் நீர் செல வாகும்.  நாங்கள் உருவாக்கியுள்ள கழிவறை மிகச் சிக்கனமானது. குழாய்நீர் மூலம் அதனை பயன்படுத்தலாம்.

-பரமேஷ்வரன் ஐயர், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்.