எரிகா சைமண்ட்ஸ்தலைவன் இவன் ஒருவன்  39

அமெரிக்காவின் ஓக்லாந்தைச் சேர்ந்தவரான எரிகா சைமண்ட்ஸ் சோலார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களை அதில் பங்கேற்க உதவி வருகிறார். “புதுப்பிக்கும் ஆற்றல் கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்வதே லட்சியம். இதில் மக்கள் பங்கேற்பிற்கான வாய்ப்பு பற்றி சிந்தித்து வருகிறோம்” என் கிறார் எரிகா.   

2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட GRID Alternatives என்ற நிறுவனத்தில் வளர்ச்சி மேலாளராக பணியாற்று கிறார் எரிகா. இந்த நிறுவனம் தன் தூய சோலார் பேனல்கள் மூலம் 8 லட்சம்  கிலோவிற்கும் அதிகமான கார்பன் வெளியீட்டைக் குறைத்துள்ளது.

36,399 நபர்களுக்கு சோலார் பேனல்கள் நிறுவுவது தொடர்பாக பயிற்சியளித்துள்ள நிறுவனம், 41,595  கிலோவாட் மின்சாரத்தை  சேமிப்பதற்கான செயல்பாட்டை தொடங்கியுள்ளது. மின்சாரவசதி எட்டாமலிருந்த அமெரிக்க பழங்குடி மக்கள் பதினைந்தாயிரம் பேர்களுக்கு மிகக்குறைந்த  விலையிலான  சோலார்பேனல்களை கிரிட் நிறுவனம் வழங்கியது.
 
கமிலா தோர்ண்டைக், பேஜ் அட்செஸன்

கமிலா மற்றும் அட்செஸன் இருவரும் தொடங்கிய Put A Price On It  திட்டத்தின் அடிப் படையில் கார்பன் மாசுக்கு அதிக கட்டணம் விதிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஒவ்வொரு  நாட்டிலுள்ள அரசும்  இதற்கென கார்பன் வரியை விதிக்க அறிவுறுத்துகின்றனர் இவ்விரு செயல்பாட்டாளர்கள். “எதிர் காலத்தை ஆரோக்கியமாக மாற்ற இளைஞர் களுடன் பணியாற்றுவது அவசியம். நமது திட்டங்களை பிரசாரம் செய்யவும் அவர்கள் உதவுவார்கள்” என்கிறார் அட்செஸன்.   

வெர்மான்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அட்செஸன், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சூழல் துறையில் தன்னார்வலராக செயல்பட்டுவருகிறார். முப்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அட்செஸன். வொய்ட்மேன் கல்லூரியில் பட்டம் பெற்ற கமிலா, Coal என்ற பெயரில் கரிம எரி பொருட்களைத்  தவிர்க்கும் செயல்பாட்டிற்காக நாடக இயக்கமே நடத்தியவர்.
   
2013 ஆம் ஆண்டு ‘அவர் க்ளைமேட்’ என்ற அமைப்பைச் சேர்ந்த கமிலா, அட்செஸன் இருவரும் ஓரேகான் பகுதியில் சாலமன் மீன் வடிவை மக்களுடன் இணைந்து உருவாக்கி சூழல் விழிப்புணர்வை பிரசாரம் செய்தனர். கார்பன் மாசுக்கு வரி என்ற மசோதாவை சட்டமாக்க உழைத்து வருகின்றனர் இந்த சூழல் தோழிகள்.

பகதூர் ராம்ஸி