சம்பளத்தில் தீண்டாமை!



இங்கிலாந்திலுள்ள நிறுவனங்கள் தம் நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளம் பற்றி அரசுக்கு தெரிவிக்கும் உத்தரவு அமுலாகியுள்ளது. மூன்றில் இருபங்கு நிறுவனங்கள்(6,240) சம்பள விவரத்தை அரசிடம் தெரிவித்துள்ளன. மீதமுள்ள 2,760 நிறுவனங்களிடமிருந்து  எத்தகவலுமில்லை. தகவல் அளிக்காத நிறுவனங்கள் மீது அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

தற்போது இங்கிலாந்தில் 78% ஆண்களுக்கு பெண்களைவிட அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம்பள வேறுபாடு 18.4% என்கிறது தேசிய புள்ளியியல் ஆய்வு(ONS). குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, வீட்டு வேலைகள், சுரங்கவேலைகள் ஆகியவற்றைத்  தவிர பிற வேலைகள் அனைத்திலும் ஆண்களின் ஆதிக்கமும்  சம்பளமும் அதிகம்.

நிதித்துறைச்  சார்ந்த சேவைகளில் பெண்களுக்கு பெரும் ஊதிய இடைவெளி(35.6%) காணப்படுகிறது. வர்ஜின்மணி நிறுவனத்தில் 38.5% சதவிகிதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளவேறுபாடு நிலவுகிறது.