அலங்கார சீஸ் ஆஸிபெக்!



போலந்தின் புகழ்பெற்ற சீஸ் வகைகளில் ஒன்று ஆஸிபெக் (Osypek). தாத்ராஸ் மலைத்தொடரின் கீழேயுள்ள நகரமான ஸகோபேனின்  தெருக்களில்  விற்கப்படும் பொருட்களில்  முக்கியமானது ஆஸிபெக் சீஸ். இதயவடிவிலான பர்ஸெனிகா டிசைனில் இந்த சீஸ் அலங்காரம் செய்யப்பட்டு விற்கப்பட்டாலும் இதில் போலிகளும் நிறைய உண்டு.

17-23 செ.மீ. நீளத்தில் 800 கிராம் எடையில் ஆஸிபெக் சீஸ் தயாரிக்கப்படுகிறது. செம்மறி ஆட்டின் பாலில் இருந்து உருவாகும் இந்த சீஸ், ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரெடியாகிறது.  குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட காரணம், மலையில் விளையும்   பசும்புற்களை  ஆடு  மேய்வதால்   கிடைக்கும் பால் ஃப்ரெஷ்ஷாக   இருக்கும்  என் பதுதான்.

“நாங்கள் சீஸை  கை களால் தயாரிக்கிறோம்” என்கிறார்  சீஸ் தயாரிப்பாளரான ஜனினா ஸெப்கா. ஏழு லிட்டர் பாலில் ஒரு கிலோ சீஸ் தயாரிக்கலாம்.பெரும்பாலும் சீஸ் தயாரிப்புக்கான பொருட்கள் அனைத்தும் மரப்பொருட்களே. Scypac என்ற  வார்த்தையிலிருந்து உருவான ஆஸிபெக் சீஸில் 60% ஆட்டின் பால் உள்ளது. போலந்தில் பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து சீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.