அதிகரிக்கும் உடல் வெப்பம்!



வெப்பம்  அதிகரித்துவரும்  சூழலில் நம் உடல் எவ்வளவு வெப்பத்தைத்தான் தாங்கும்? நம் உடலின் இயல்பான  வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.   பாரபட்சமின்றி  அனைத்து  வயதினரையும்  பாதிக்கும் விஷயம் இது. முப்பத்து ஏழு டிகிரி செல்சியசிற்கு மேல் 3.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் உடல் சோர்விற்கான அறிகுறிகளை காட்டத்தொடங்கிவிடும்.  

குளிர்சூழலில் தன் உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள போராடும். உடல், அதிவெப்ப சூழலில் தன் சுய வெப்பத்தை மெல்ல இழக்கும். ரத்தம் வெப்பத்தினால் விரிவாகி தோல்புறமுள்ள நரம்புகளில் வேகமாகப் பாயும். இதன்விளைவாக சிலரின் தோல் சிவப்பாக மாறும். அடுத்து  உடலைக் குளிர்விக்க சுரக்கும் வியர்வை, வெளிச்சூழலில் ஈரப்பதமும், காற்றும் குறையும்போது அதிகமாகும்.

ஓய்வில் குறைந்திருக்கும் உடல்வெப்பநிலை, உடல்தசைகள் இயங்கும்போது அதிகரிக்கத் தொடங்கும். எனவே வெப்பம் விளையாட்டு வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எமனாகும் வாய்ப்பு  அதிகம். வெயிலால் தலைவலி, குமட்டல், கிறுகிறுப்பு  தட்டும்போது  நிழலில்  ஓய்
வெடுத்து நீர்அருந்துவது நல்லது.