அறிவோம் தெளிவோம்!உடனடி உணவுவகை பொருட் களில் பயன்படும்  உணவு காகிதங்கள், கறை அகற்றும் திரவங் களில் Polyfluoroalkyl(PFA) பயன் படும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து புற்று நோயைத் தூண்டுகிறது. வினைல் திரைத்துணிகள், நகப்பூச்சு, வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றில் பயன்படும் தாலேட்டுகளால் மலட்டுத் தன்மை ஏற்படும்.  

ஷாம்பூ, ஹேர் ஜெல், லோஷன்கள், டின் உணவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், சன்ஸ்க்ரீன் லோஷன், லிப்பாம், பற்பசை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பாரபீன், பிஸ் பெனால்,  பென்ஸோபெனான்ஸ் ஆகிய வேதிப்பொருட்களால் தைராய்டு பிரச்னை ஏற்படுவதோடு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் பாதிப்பும் ஏற்படும். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் உள்ள டைகுளோரோபென்ஸேன், நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.